Published : 14 Oct 2023 04:37 AM
Last Updated : 14 Oct 2023 04:37 AM

உணவு, குடிநீர் இன்றி காசா மக்கள் பரிதவிப்பு

காசா ந;கர்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி ஜெனிபர் ஆஸ்டின் கூறியதாவது:

காசா பகுதிக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திவிட்டது. ராணுவதாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து காசாமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீர், மின்சாரம், எரிபொருள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது. நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அறுவைச் சிகிச்சை செய்ய முடியவில்லை.

காசாவில் தற்போது இருப்பில்உள்ள குடிநீர், உணவு பொருட்கள்சில நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இப்போதே லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பசியால் வாடுகின்றனர். காசா பகுதி முழுவதும்சாலை, தெருக்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

தொலைத்தொடர்பு வசதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. மிக குறுகிய காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வெளியேறுவது கடினம்.இஸ்ரேல் ராணுவம் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு ஜெனிபர் ஆஸ்டின் தெரிவித்தார்.

ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில், “பாலஸ்தீனத்தின் காசா பகுதி நிலைமை ஏற்கெனவே மிக மோசமாக இருக்கிறது. அதை மேலும் மோசமாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் ராணுவத்தை கேட்டு கொள்கிறோம். காசாவின் தெற்குப் பகுதியில் செயல்படும் ஐ.நா. அகதிகள் அமைப்பின் தலைமை அலுவலகத்தை இடமாற்றம் செய்ய மாட்டோம். எங்களது அலுவலகம் அங்கேயே செயல்படும். இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களுக்கு முழுமையாக பாதுகாப்புஅளிக்க வேண்டுகிறோம். ஐ.நா.சபையின் நிவாரண முகாம்கள்,ஐ.நா. சபையின் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தாரிக் கூறும்போது, “போரில் படுகாயம்அடைந்த பலர் காசா பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்துவது கடினம். நோயாளிகளை பரிதவிக்கவிட்டு வெளியேறமருத்துவர்கள், செவிலியர்கள் மறுத்துவிட்டனர். இஸ்ரேல் ராணுவம் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

காசாவின் 750 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்றுதாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று இஸ்ரேலின் ஆஸ்கெலான் நகர் பகுதியை குறிவைத்து 150 ராக்கெட் குண்டுகளை வீசினர். அதோடுஅவர்கள் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின்மீது 2 ட்ரோன்கள் மூலம் தாக்குதல்நடத்தினர். இஸ்ரேலின் இந்த சர்வதேச விமான நிலையத்தில் இருந்துதான் 212 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்தியதாக்குதல்களில் பாதிப்பு எதுவும் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x