Published : 14 Oct 2023 04:43 AM
Last Updated : 14 Oct 2023 04:43 AM

காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டாம்: ஹமாஸ் தீவிரவாதிகள் வேண்டுகோள்

கோப்புப்படம்

காசா நகர்: ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசாவின் வடக்குபகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். இஸ்ரேல் ராணுவத்துக்கு அஞ்ச வேண்டாம். துணிச்சலுடன் செயல்படுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் ராணுவம் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை காசா பகுதி மீது வீசியுள்ளது. இதில் 1,530 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதிமீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்நடத்தி வருவதற்கு பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் நேற்று கூறும்போது,“காசா பகுதி மீதான தாக்குதலைஇஸ்ரேல் ராணுவம் உடனடியாகநிறுத்த வேண்டும். இல்லையெனில் இந்த போர் மத்திய கிழக்கின் இதர பகுதிகளுக்கும் பரவும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் துணை தலைவர் நயீம் குவாசம் நேற்று கூறும்போது, “பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் கொடூர தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த போரில் ஹிஸ்புல்லா தலையிடக்கூடாது என்றுஉலகின் வல்லரசு நாடுகள், ஐ.நா.சபை உள்ளிட்டவை வலியுறுத்தி உள்ளன. யாருடைய அறிவுறுத்தலும் எங்களுக்கு தேவையில்லை. எங்களது கடமையை செய்வோம். நாங்கள் போருக்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இராக்கின் சில அமைப்புகளும் ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சி படையும் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபட்டால் நாங்களும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபடுவோம் என்று இந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x