Published : 08 Dec 2017 10:09 AM
Last Updated : 08 Dec 2017 10:09 AM

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராகபுதிய கூட்டணி உதயம்

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டணியை எதிர்த்து தமிழ் எம்பிக்கள் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

இலங்கையில் பல்வேறு கட்சி கள் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டணி தமிழர்களுக்கு ஆதர வான முக்கிய அணியாக உள்ளது. இதன் தலைவராக ஆர்.சம்பந்தன் உள்ளார். இந்நிலையில், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை தாமதப்படுத்தி வரும் இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டணியும் ஆர்.சம்பந்தனும் செயல்படுவதாக தமிழ் எம்பிக்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த அதிருப்தி எம்பி.க்கள் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டணிக்கு எதிராக தமிழ் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அணியை உருவாக்கியுள்ளனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த சிவசக்தி ஆனந்தன் கூறுகையில், ‘‘எங்கள் கட்சியும், மூத்த தலைவர் வி.அனந்த சங்கரி தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியும் இணைந்து புதிய அணியை உருவாக்கியுள்ளோம். எங்கள் அணியில் மேலும் தமிழ் கட்சிகள் சேரும். இப்போதைய தமிழ் தேசியக் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை இலங்கை அரசு தாமதப்படுத்துகிறது. அரசின் மீது மென்மையான போக்கை தமிழ் தேசிய கூட்டணி கடைபிடிக்கிறது’’ என்றார். விரைவில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என்று தெரிகிறது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போருக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் போதுமான அளவு நடக்கவில்லை என்றும் போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றி வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தமிழர் கட்சிகள் கோரி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x