Published : 14 Jul 2014 02:28 PM
Last Updated : 14 Jul 2014 02:28 PM

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: இதுவரை 172 பாலஸ்தீனர்கள் பலி

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 172 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலைச் சேர்ந்த 3 இளைஞர் களை காஸாவில் செயல்படும் ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திச் சென்று, கொன்றனர். அதைத் தொடர்ந்து அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை தேடும் நட வடிக்கையை இஸ்ரேல் தீவிரப் படுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரி வித்து ஹமாஸ் இயக்கத்தினர் ராக் கெட் குண்டு வீச்சில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த யூதக் குழுவினர், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை கடந்த 2-ம் தேதி சுட்டுக்கொன்றனர். அதற்கு பழி வாங்கும் விதமாக காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் பகுதியை நோக்கி நடத் தப்பட்ட ராக்கெட் குண்டு வீச்சும் அதிகரித்தது. இந்நிலையில், காஸாவுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் கடந்த 8-ம் தேதி முதல் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆறு நாட்களில் 172 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட் டுள்ளனர்.

3 எம்.பி.க்கள் கைது

ஒரு பக்கம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீனப் பகுதிக்குள் ராணுவத்தினரை அனுப்பி, தங்கள் நாட்டைச் சேர்ந்த 3 பேரை கடத்திக் கொன்ற கும்பலை தேடும் பணியில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டு வரு கிறது. அதுபோன்றதொரு தேடுதல் நடவடிக்கையின்போது, பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் உள்ள ஹெப்ரானில் வசித்த முனிர் அகமது பதாரின் என்பவர் இஸ்ரேல் ராணுவத் தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஹெப்ரான் பகுதியில் 13 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளதாகவும், அதில் மூன்று பேர் ஹமாஸ் பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நயீப் ரஜுப், முகமது ஜெய்ஸா, முகமது அகெல் ஆகியோர் எனவும் கூறப்படுகிறது.

மேற்குகரைப் பகுதி முழுவது மிருந்தும் இதுவரை மொத்தம் 23 பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

ஆளில்லா விமானம்

இதனிடையே காஸா பகுதியி லிருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம் இஸ்ரேலின் அஷ்தோத் நகரில் பறந்ததாகவும், அதை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானத்தை பேட்ரியாட் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி அழித்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்கு தல் தற்போதைக்கு முடிவுக்கு வராது, இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரி வித்துள்ளார்.

உலக நாடுகள் வேண்டுகோள்

எனினும், தாக்குதலை நிறுத் தும்படி இஸ்ரேல் பிரதமருக்கு சர்வதேச நாடுகள் நெருக்குதல் கொடுத்து வருகின்றன. தாக்கு தலை உடனடியாக நிறுத்தும்படி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அறிவுறுத்தியுள்ளார். அப்பகுதி யில் அமைதியை ஏற்படுத்த தேவை யான முயற்சிகளை எடுக்கப்போவ தாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார். மோதலை நிறுத்த இஸ்ரேல் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையே திரைமறைவில் எகிப்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

லெபனானிலிருந்து தாக்குதல்

இதற்கிடையே லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து இஸ் ரேலை நோக்கி 3-வது முறையாக திங்கள்கிழமை ராக்கெட் குண்டு வீச்சு நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் 5 முறை தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்து லெபனான் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர் பழமை வாத இயக்கத்தைச்சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ் தீனத்தின் காஸா பகுதியிலிருந்து ஹமாஸ் இயக்கத்தினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவாக, லெபனானிலிருந்து அந்த நபர் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியது, தெற்கு லெபனான் பகுதியில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பா, அல்லது அல் காய்தா வுடன் தொடர்புடைய அப்துல்லா அஸ்ஸம் படை என்ற அமைப்பா என்பது குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x