Published : 19 Nov 2017 11:38 AM
Last Updated : 19 Nov 2017 11:38 AM

இலங்கையில் கலவரம் ஊரடங்கு; 19 பேர் கைது

இலங்கையின் காலி மாகாண பகுதிகளில் பெரும்பான்மை பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது. அங்கு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தெற்குப் பகுதியில் காலி மாகாணம் உள்ளது. அந்த மாகாணத்தின் கிந்தோட்டை, வெலிபிடிமோதர, மஹபுகல, ருக்வத்த, பியதிகம உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள் மீது பவுத்தர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த கலவரத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும் காலி மாகாணம் மட்டுமன்றி இலங்கை முழுவதும் பதற்றம் நிலவுகிறது. கிந்தோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிலவும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து பவுத்தர்கள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் பாதுகாப்பில்லை என்றும் ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x