Published : 23 Nov 2017 03:34 PM
Last Updated : 23 Nov 2017 03:34 PM

பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்ட பூனைக்கு ட்விட்டரில் பெருகும் ரசிகர்கள்

ஜோர்டானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் லாரன்ஸ் என்ற பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இப்பூனைக்கு ட்விட்டரில் நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரிட்டிஷ் தூதரகத்தால் லாரன்ஸ் ஆஃப் அம்டன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பூனை கடந்த மாதம் விலங்குகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. தற்போது லாரன்ஸ் ஜோர்டானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் பூனையின் நடவடிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும்வண்ணம் சமூக வலைதளத்தில் 'லாரன்ஸ் ஆஃப் அம்டன்' என்ற பெயரில் கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. தற்போது லாரன்ஸை 5,000க்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள்.

இதுகூறித்து பிரிட்டிஷ் துணை தூதர அதிகாரி லாரா டவுபன் கூறும்போது, "லாரன்ஸ் மூலம் ஜோர்டானின் வித்தியாசமான பக்கத்தை பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. மேலும் இதனால் ஜோர்டானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்துக்கு தனித்துவம் கிடைத்துள்ளது.

கருப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும் லாரன்ஸ், எலி பிடிப்பதை தவிர்த்து செய்யும் அதன் பிற  செயல்கள் ட்விட்டரில் பதிவிடப்படுகிறது.

ட்விட்டரில் சில பின் தொடர்பாளர்கள் அதன் புகைப்படத்தின் கீழ் அது சற்று பருமனாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளதால் லாரன்ஸ் தற்போது சோகமாக இருக்கிறது. அதனால் அதனை சரிசெய்ய லாரன்ஸ் உடற்பயிற்சி செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

மறைந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி டி.இ. லாரன்ஸ் நினைவாக இப்பூனைக்கு இப்பெயர் சூட்டப்பட்டதாக பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x