Published : 30 Jul 2014 10:46 AM
Last Updated : 30 Jul 2014 10:46 AM

இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரம் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய எம்.பி. எதிர்ப்பு: பிரதமர் டோனி அபோட் அரசுக்கு கண்டனம்

கடலில் இருந்து மீட்கப்பட்டு, ஆஸ்தி ரேலிய முகாமில் தங்கவைக்கப்பட் டுள்ள அகதிகளை இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் காணும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய எம்.பி. சாரா ஹான்சன் யங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இத்தகு நடவடிக்கையில் ஈடுபட இந்திய தூதரகத்துக்கு சட்டரீதியான உரிமை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 157 பேர், கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றனர். இவர்கள் ஆஸ்திரேலி யாவுக்குள் நுழைய சட்டப்பூர்வ அனுமதி இல்லை. ஆகவே, நடுக்கடலில் தத்தளித்தனர். கடந்த 7-ம் தேதி இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி கடல்வழியாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்ற னர். ஆனால், இந்த அகதிகள் இந்தியாவிலிருந்து வந்திருப்ப தால், மனுஸ் தீவு அல்லது நவ்றூ தீவுகளில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

எம்.பி. எதிர்ப்பு

இதனிடையே, இந்தியாவிலிருந்து வந்த அகதிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும்பணியில், ஆஸ் திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் ஈடுபடவுள்ள னர். இதற்கு எம்.பி. சாரா ஹன்சன் யங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர்கூறும்போது, “ஆஸ்திரேலி யாவில் தஞ்சம்கோரும் இந்த அகதிகள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு எவ்வித சட்டப்பூர்வ அடிப்படைக் காரணமும் இல்லை.

இந்தியாவில் தஞ்சம் கோருபவர் கள் தொடர்பாக இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்ப தில்லை; ஐ.நா. அகதிகள் ஆணை யத்திடம் விட்டுவிடுகிறது. ஆஸ் திரேலியாவில் இந்தியா எவ்வித தலையீடும் செய்யக்கூடாது.

பிரதமர் டோனி அபோட் அரசின் தெளிவற்ற நடவடிக்கையையே இது வெளிப்படுத்துகிறது. இலங்கை அகதிகள் ஆஸ்திரேலிய மண்ணில் காலடி எடுத்து வைத்து விட்டனர். அவர்கள் நம் உதவியைக் கோருகின்றனர்.

இம்மக்கள் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பில் இருப்பது தெளிவு படுத்தப்பட்ட ஒன்று. அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில்தான் இருக் கின்றனர். அடுத்து என்ன செய்யப் போகிறோம். இலங்கை அரசு இங்கு வந்து அந்த தமிழர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்கப் போகிறோமா? இந்தச் செயல், இராக்கை விட்டு வெளியேறியவர் களிடம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு விசாரணை நடத்த அனுமதிப்பதைப் போன்றதாகும்.

அந்த அகதிகள், ஆஸ்திரேலியாவில் உரிமை பெற்றுள்ளனர். அபோட் அரசு அந்த உரிமைகளை மதிக்க வேண்டும். அந்த அகதிகளுக்கு எவ்வகையிலான மருத்துவ உதவி அளிக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குறிப் பாக குழந்தைகளுக்கு அளிக்கப் பட்ட மருத்துவ உதவிகளை அறிவிக்க வேண்டும். முகாமிலுள்ள குழந்தைகளுக்கு என்ன நேரிடுமோ என அஞ்சுகிறேன். ஒரு மாதம் முழுக்க கடலில் பயணித்த அக் குழந்தைகள் தற்போது பாலைவனத் தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் பிரென் நந்தா கூறும்போது, “ஐ.நா. அகதிகள் உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிடாவிட்டாலும், இந்திய அரசு அகதிகள் விஷயத்தில் உயர்ந்த மரபைக் கடைப் பிடிக்கிறது.

ஐ.நா. அகதிகள் ஆணையம் இந்தியாவைப் பல்வேறு சமயங் களில் வெளிப்படையாகப் பாராட்டியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x