Last Updated : 10 Aug, 2023 04:18 AM

 

Published : 10 Aug 2023 04:18 AM
Last Updated : 10 Aug 2023 04:18 AM

சுதந்திர சுடர்கள்: மகத்தான மதிய உணவுத் திட்டம்

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் ஒரு மகத்தான மக்கள் திட்டமாக உருவெடுத்தது. பசியோடு இருக்கும் ஏழை, எளிய குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைக்கவும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும்தான் மதிய உணவுத் திட்டம் உருவானது.

உண்மையில், ஒரு நூற்றாண் டுக்கு முன்பே நாட்டிலேயே முதன்முறையாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுவிட்டது. 1922-லேயே ஏழை பட்டியலின குழந்தைகள் பள்ளிகளை நோக்கிச் செல்வதில் பசி மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பதால், அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாட்டின் முதல்பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.ராஜா சட்டப்பேரவை கவுன்சிலில் வலியுறுத்தினார்.

இதைஅடுத்து, 1923-ல் சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மதராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சிஅரசு தொடங்கி வைத்தது. 1924-ல்சென்னை மாகாணத்தில் சிங்காரவேலரும் எல்.சி.குருசாமியும் இணைந்து தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பள்ளிகளில் மதியஉணவுத் திட்டத்தை அமல்படுத்தினர்.

சுதந்திரத்துக்குப் பிறகு மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்தகாமராஜர் மதிய உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தினார். 1956ஆம் ஆண்டில் மதிய உணவுத் திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமாக தமிழகம் முழுவதும் முழுமை அடையச் செய்தவர் காமராஜர்தான்.

அதன் தொடர்ச்சியாக 1982இல்எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. அவருடைய ஆட்சிகாலத்தில்தான் ‘சத்துணவுத் திட்டம்' என்று தனித்துறையாக இத்திட்டம் செயல்படத் தொடங்கியது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் இத்திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட்டது. தமிழகத்தைப் பார்த்துதான் பிற மாநிலங்களும் 2000க்குப் பிறகு மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தின. அந்த வகையில் இத்திட்டத்தைத் தொடங்கி இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்தது தமிழகம் தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x