Published : 27 Nov 2023 04:18 AM
Last Updated : 27 Nov 2023 04:18 AM

ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை 21: லோக்கல்னு ஏன் சொல்றாங்க?

ஒருவன் நிற்பதைக் கூட கவனிக்காமல் இடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் ஓடுகிற மாணவர்கள் மீது சத்யாவுக்குக் கோபம் பொங்கியது. "அறிவில்ல !" என்று கத்தினான். அதைக் கேட்டதும் அவர்கள் நின்றனர். அருகே வந்தனர். யாருடா நீ? புதுசா இருக்க? நியூ அட்மிசனா? மச்சான் கவர்மெண்ட் ஸ்கூல் யூனிபார்ம். லோக்கல்டா இவன்! அடுத்தடுத்த கேள்விகளால் சத்யாவின் கோபம் வெளிப்பட்டது. ஒருவனின் சட் டையைப் பிடித்தான். அவனும் சத்யாவின் சட்டையைப் பிடித்தான். அவனுடன் வந்தவர்களும் ஆளுக்கொரு பக்கம் தள்ள சிறு சண்டை மூண்டது.

அப்போது உடற்கல்வி ஆசிரியர் வருகிறார். "என்னஅங்கே சண்டை?" என்றதுமே 'ஒன்றுமில்ல சார்' என்று சொல்லிவிட்டு விலகிச்செல்கின்றனர். காந்தி மகிழ்ச்சியோடு பள்ளி முதல்வர் அறையிலிருந்து வருகிறார். 'அட்மிசன் கிடைச்சிருச்சு சத்யா!" என்று முகமெல்லாம் மகிழ்ச்சி. 'அப்பா இந்த ஸ்கூல் எனக்குப் பிடிக்கவே இல்லப்பா!' என்று சத்யா சொல்கிறான். நல்ல டிரஸ் போட்டு, டை கட்டி நீ போனால் பணக்கார பசங்க மாதிரி இருக்கும் என்று அவர் சொல்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x