Published : 28 Jan 2020 09:07 AM
Last Updated : 28 Jan 2020 09:07 AM

செய்திகள் சில வரிகளில் - சிசிடிவி கேமராவினால் குற்றம் குறைந்தது: டெல்லி முதல்வர்

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில்,“ பெண்கள் பாதுகாப்புக் காக நகரம் முழுவதும் 2 லட்சம் சிசிடிவி கேமரா (கண்காணிப்பு கேமரா) பொருத்தப்பட்டது.

இதனால் நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங் கள் அதிகளவில் குறைந் துள்ளன. கடந்த தேர்தலில் நீங்கள் எனக்கு வாக்கு செலுத்தியதால்தான் இது சாத்தியமானது” என்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி ஏற்றிய மாற்றுத் திறனாளி

காஸியாபாத்

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் 18 வயது மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றினார்.
பாதுகாப்பு பணியாளரின் மகனாக இளைஞர் ஹர்ஷ் குமார் தேசிய கொடியை ஏற்றியதும் காவ

லருக்கான மரியாதையை ஏற்றுக் கொண்டார் என மாவட்ட ஆட்சியர் அஜய் ஷங்கர் பாண்டே கூறினார். இதுகுறித்து அஜய் ஷங்கர் பாண்டே கூறுகையில், “ஹர்ஷ் குமார் ஒரு முழுமையான மாற்றுத் திறனாளி. அதனால் தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை இவருக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினோம்.

தவிர, இவர் காவலருக்கான மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். மேலும் இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சிறந்த பணியாளர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த விழாவில் வேறு 5 மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x