2026 வெற்றி ஆண்டாகட்டும்

2026 வெற்றி ஆண்டாகட்டும்
Updated on
2 min read

இனிதாய் தொடங்கி இருக்கிறது புத்தாண்டு. பழமையும் புதுமையும் கைகோத்து அடியெடுத்து வைக்கும் இந்தப் புத்தாண்டின் தொடக்கம் உற்சாகத் தையும் உத்வேகத்தையும் தருகிறது. எப்படி இருந்தது 2025ஆம் ஆண்டு என்பதற்கான மாணவர்களின் பதில்கள் விதவிதமாய் இருக்கின்றன. வித்தியாசமாக இருக்கிறது.

மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டேன். கணினி இயக்க கற்றுக்கொண்டேன். உண்டியலில் சேமிக்கக் கற்றுக்கொண் டேன். நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். இதுவரை அறியாத புத்தகங்களை அறிந்தேன். பாடம் சார்ந்த தகவல்களைத் திரட்ட பள்ளி நூலகத்துக்குச் சென்றபோது புதியபுதிய புத்தகங்களைப் பார்த்தேன். நாள்தோறும் செய்தித்தாள்கள் படித்தேன் - இப்படி.

முன்னேறும் மூவர்: மிக முக்கிய செய்திக் குறிப்புகளைத்தனி நோட்டில் எழுதி வைத்துக்கொண் டேன். செய்திகளின் மூலமாக குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, சிம்பொனி இசை தந்த இளையராஜா, விண் வெளிக்குச் சென்ற ஷுபன்ஷு சுக்லா, இஸ்ரோவின் 100வது ராக்கெட், உலகளாவிய மாநாடுகள், ஈட்டி எறிந்து சாதித்த நீரஜ் சோப்ரா போன்ற சாதனையாளர்களை அறிந்தேன்.

முதல் முறையாகக் கலைத் திருவிழாவில் பங்கேற்றேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றேன். வாரந்தோறும் வாசிப்பு இயக்க நூல்கள் படித்தேன். விநாடி வினா நிகழ்வில் பங்கேற்றேன். ஆண்டு விழா நிகழ்ச்சியில் எனது திறமையை வெளிப்படுத்தினேன் எனப் பதில்கள் தொடர்கின்றன.

2025இல் ஆசிரியர்களும் தொல்லியல் சுற்றுலா, அறிவியல் கண்காட்சி, சுற்றுச்சூழல் மன்றம் முதலான முன் னெடுப்புகளின் வழியாக தாங்கள் பெற்ற விழிப்புணர்வு, படிப்பிலும் விளை யாட்டிலும் தங்களின் மாணவர்கள் வெற்றி பெற தாம் அளித்த வழிகாட்டுதல்களை வரிசைப்படுத்துகிறார்கள்.

சரிவிகித உணவு அளிப்பது, உடற் பயிற்சியை ஊக்குவிப்பது போன்ற செயல்பாடுகளின் மூலம் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தில் முன்பைக்காட்டிலும் பெரும் பங்கு வகிப்பவராகப் பெற்றோர் பலர் மாறி யிருக்கிறார்கள். பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் பங்கு பெற்று மாணவர் வளர்ப்பிலும் பள்ளி வளர்ச்சியிலும் துணைநிற்கிறார்கள்.

நற்பண்புகளைக் கொண்ட மாண வர்களை உருவாக்குவதில் ஆசிரியர், பெற்றோர், சமூகத்தின் வழிகாட்டியாக வெளிவரும் சில செய்தித்தாள்களும் தங்களின் பங்களிப்பைத் தொடர்வது நல்ல சமூகத்தின் அடையாளமாகும். 2026லும் இது தொடர வேண்டும்.

சாதனை முகம்: பள்ளியிலும் வீட்டிலும் தேசத் தலை வர்கள் படங்களைச் சுவரில் மாட்டும் வழக்கம் சில காலம் முன்புவரை இருந்த ஒன்று. சமகாலத்தில் பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களின் படங்களை வீட்டிலும் பள்ளியிலும் காட்சிப்படுத்தலாம். மாணவச் செல்வங் கள் உயரிய மனிதர்களின் பண்புகள், சாதனைகளைக் கண்டு பின்பற்ற அது ஊக்க சக்தியாக அமையும்.

எதை நாள்தோறும் பார்க்கிறோமோ, எதை நாள்தோறும் செய்கிறோமோ அதுவே பழக்கமாகி வாழ்வில் தொடர்வதைப் போல சாதனையாளர்களை நாள்தோறும் பார்த்தும் படித்தும் அவரவர் சார்ந்த விருப்ப துறைகளில் வெற்றி பெறத் துணைநிற்கும்.

புத்தாண்டில், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தொல்லியல் தளங்கள், அருங்காட்சியகங்கள், நூல கங்கள், அறிவியல் காட்சி மையங்களுக்கு வார இறுதியில் குழந்தைகளைப் பெற்றோர் அழைத்துச் செல்லும் புதிய பழக் கத்தை ஏற்படுத்தலாம். பரந்துவிரிந்த உலகம் பற்றிய விசாலமான பார்வை யைக் குழந்தைகளுக்கு ஊட்ட இது துணைபுரியும்.

தொடக்கப் பள்ளி மாணவர் களுக்குச் சிறார் பாடல்களை அறிமுகப் படுத்துவதைப் போலவே உலகின் தலை சிறந்த இசையை அறிமுகப் படுத்துவதும் நல்லது. பள்ளிக்கூடம், வீடு, சமூகம் என அனைத்திலும் நல்ல காட்சிகள், நல்ல அறங்களின் சாட்சிகள் அடுத்தடுத்த தலை முறையைச் சிறந்ததாக ஆக்கட்டும். 2026 அனைவருக்கும் வெற்றி ஆண்டாகட்டும்.

- கட்டுரையாளர்: மா.கோவிந்தசாமி, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர், குழிப்பட்டி, தாசம்பட்டி, பென்னாகரம், தருமபுரி; govindasamypgm@gmail.com

2026 வெற்றி ஆண்டாகட்டும்
எல்லாக் குழந்தைகளுக்கும் தேவை ஒன்றல்லவே | நட்சத்திரக் குழந்தைகள் 01

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in