Published : 15 Nov 2019 01:09 PM
Last Updated : 15 Nov 2019 01:09 PM

அறிந்ததும் அறியாததும்

எதிர்ச்சொல்லாக மாற்றும் எழுத்துகள்! சொற்களுக்கு முன்னும் பின்னும் இடம்பெறுவதன் மூலம் அவற்றின் பொருளை மாற்றக்கூடிய எழுத்துகள் பற்றி நேற்று பேசத் தொடங்கினோம்.

அந்த வரிசையில், ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துபவை, il-, im-, in-, ir- ஆகிய Prefix-கள். இவற்றில் எது ஒரு சொல்லுக்கு முன்னால் இடம்பெற்றாலும் not (அதுவல்ல) என்றுதான் பொருள். ஏற்கெனவே ஒரு சொல் தரும் பொருளுக்கு நேரெதிரான பொருளைத் தரக்கூடிய Prefix இவை.

உதாரணத்துக்கு,

Legal – Illegal
Possible – Impossible
Definite – Indefinite
Responsible – Irresponsible

Legal என்றால் சட்டப்படி, சட்டத்துக்கு உட்பட்ட என்ற அர்த்தம். இந்தச் சொல்லுக்கு முன்பாக il சேர்க்கப்படும் போது, சட்டத்துக்கு புறம்பான என்ற எதிர்மறை பொருள்படும் சொல்லாக அது மாறிவிடும். அதே போலத்தான் - Logical -illogical Possible என்றால் நடக்கக்கூடியது என்று அர்த்தம்.

அதே அதற்கு முன்பாக im இடம்பெறும் போது ‘சாத்திய மற்றது’ என்ற முற்றிலும் நேரெதிரான பொருள் தரும் சொல்லாக அது மாறிவிடும். இதே போலதான் Perfect – Imperfect இதே வகையில் இந்த வரிசையில் உள்ள மற்ற சொற்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x