Last Updated : 12 Nov, 2021 03:18 AM

 

Published : 12 Nov 2021 03:18 AM
Last Updated : 12 Nov 2021 03:18 AM

நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகும் ஆன்லைனில் பாடம் கற்பிப்பு; தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தின் கெடுபுடியால் மாணவர்களின் கல்வி திறன் பாதிப்பு: விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிஇஓ எச்சரிக்கை

வேலூர்

பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்தப்பட்டு வந்ததால் மாணவர்கள் எப்போது பார்த்தாலும் ஆன்லைனில் மூழ்கத்தொடங்கி னர். அவர்கள் வகுப்புகளைத்தான் கவனிக்கிறார்களா? அல்லது சமூக வலைதளங்களில் மூழ்கு கிறார்களா? என்ற சந்தேகம் பெரும்பாலான பெற்றோர் மனதில் கேள்வியாக எழுந்தது.

ஆன்லைன் வகுப்புகளுக்கான ஒவ்வொரு தனியார் பள்ளிகளில் ‘வாட்ஸ் அப்’ குழு தொடங்கப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் குழுவின் தலைவர்களாக இருந்தனர். இது போன்ற குழு தொடங்கும்போது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல்வேறு கட்டளைகளை பிறப்பித்தனர். குறிப்பாக, குழுவில் கல்வி சாராத விஷயங்களை பகிரக்கூடாது, உடல் நலம் விசாரிப்பு, காலை, மாலை வணக்கங்கள், பிறந்த நாள் வாழ்த்து சொல்லுதல், குடும்பம் தொடர்பான விஷயங்களை பகிரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால், குழுவில் இணைந்த மாணவர்கள் தங்கள் இஷ்டம் போல் நடந்துக்கொள்ள முடிய வில்லை. நேரடி வகுப்பு இருந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும் என சில மாணவ, மாணவிகள் ஏக்கமடைந்தனர். இதனால், மாணவர்கள் மட்டும் இருக்கக்கூடிய தனிக்குழு ஒன்றை தொடங்கி அதன் மூலம் அரட்டை அடிக்க தொடங்கினர். இதில், சமூகம், விளையாட்டு, சினிமா, நகைச்சுவை, மீம்ஸ் உட்பட குடும்ப விஷயம் முதல் அனைத்தும் பேச தொடங்கிவிட்டனர்.

இது மாணவர்களின் கவனத்தை சிதைக்கத்தொடங்கிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டினர். மேலும், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது என புகாரும் எழுந்தது. தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகு ஒரு சில தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து வருவதால் மாணவர்களின் செல்போன் அரட்டை இன்னமும் தொடர்ந்து வருவது பெற்றோர்களுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா ஊரடங்கின்போது தொடங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகள் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகும் ஏன் தொடர்கிறது என பெரும்பாலான பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகும், ஒரு சில தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பாடம் நடத் தாமல், செல்போனில் யூ டியூப் சேனலை ஆன்செய்து பாடங்களை குறிப்பெடுத்துக்கொள்ளுமாறு ஆசிரியர்கள் கூறி வருவதாக கூறப்படுகிறது. ஒரு சில வகுப்பு களில் பாடப்புத்தகங்களில் பாடம் நடத்திவிட்டு அதற்கான கேள்வி, பதில்களை யூடியூப்பில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என ஆசிரியர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.

யூ டியூப்பில் பாடம் படிப்பதற்கு ஆசிரியர்கள் எதற்கு? நேரடி வகுப்புகள் எதற்கு? நேரடி வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஏன் யூடியூப்பில் குறிப்பெடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நேரடி வகுப்புகளுக்காக பள்ளிகளில் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளி நிர்வாகம் ஏன் பாடங்களை ஆன்லைனில் குறிப்பெடுக்க அனுமதிக்கின்றனர். நேரடியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தாமல் ஆசிரியர்கள் ஏன் யூடியூப்பில் படிக்குமாறு லிங்க் அனுப்புகின்றனர் என பெற்றோர்கள் ஆதங்கப்படு கின்றனர்.

இது குறித்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேரடி வகுப்புகள் தொடங்கியபிறகு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது, ‘‘நேரடி வகுப்பில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால்,நேரடி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வீட்டு பாடங்களை கொடுப்பதோ அல்லது ஆன்லைன் மூலம் பாடங்களுக்கான பதில்களை குறிப்பெடுக்க எந்த ஆசிரியர்களும் மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என ஏற்கெனவே சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளோம்.

அரசுப்பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இது சாத்தியமாகலாம். எந்த பள்ளியில் இது போன்று நடக்கிறது என்பதை பெற்றோர் புகாராக தெரிவித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் மூலம் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தினாலும் அவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத மாணவர்கள் பெற்றோரை அழைத்து வரவேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுவதும் தவறு.

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப் படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x