Published : 17 Oct 2021 03:08 AM
Last Updated : 17 Oct 2021 03:08 AM

இந்தியன் வங்கி-அலகாபாத், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் விநாடி-வினா, குறும்படப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

சென்னை

இந்தியன் வங்கி-அலகாபாத் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆகியவை இணைந்து, கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டி மற்றும் குறும்படப் போட்டியை நடத்துகின்றன.

இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்.

‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு, வரும் 26-ம் தேதி முதல் முதல் நவம்பர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இதையொட்டி, இந்தியன் வங்கி- அலகாபாத், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஊழல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில், ‘சுதந்திர இந்தியா@75: நேர்மையுடன் கூடிய தற்சார்பு’ என்ற கருப்பொருளில் விநாடி-வினா மற்றும் குறும்படப் போட்டியை நடத்துகின்றன.

ஆன்லைன் விநாடி-வினா போட்டியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதற்கு வரும் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் https://www.htamil.org/00075 என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அக்டோபர் 25-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டிகள் நடைபெறும். ஸ்மார்ட்போன், கணினி மூலம் இப்போட்டியில் பங்கேற்க வேண்டும். முதல்கட்டத் தேர்வில் MCQ அல்லது உரை வகையில் 20 கேள்விகள் இருக்கும்.

விநாடி-வினாவை 15 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். அதற்கு முன்பு சமர்ப்பிப்போருக்கு வெகுமதி உண்டு. முதல் 6 பங்கேற்பாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். காணொலி வழியில் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

மேலும், ‘ஊழலை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி நடத்தப்படுகிறது. குறும்படங்கள் 2 நிமிடங்களுக்குள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஹரிஸான்டல் கேமரா முறையில் படமாக்கி இருக்க வேண்டும். பின்னணி இரைச்சல் இல்லாமல், நல்ல ஒலி தரத்துடன் இருக்க வேண்டும்.

பங்கேற்பாளர் பெயர், கல்லூரி பெயர், முகவரியுடன், வரும் 24-ம் தேதிக்குள் ib.vigilweek@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு குறும்படங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x