Published : 08 Sep 2021 06:44 PM
Last Updated : 08 Sep 2021 06:44 PM

ஒருங்கிணைந்த பொறியியல்‌ எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு: முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?

ஒருங்கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணி பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத்‌ தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள்‌ வெளியிடப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத்‌ தேர்வு 18.09.2021 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ 7 மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள்‌ www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் ‌(OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினைப் பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

மேலும்‌ விண்ணப்பதாரர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அ. தேர்வர்கள்‌ விடைத்தாளில்‌ விவரங்களைப் பூர்த்தி செய்யவும்‌ விடைகளைக் குறிக்கவும்‌ கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌. தவறினால்‌ அவ்வாறான விடைத்தாள்கள்‌ தேர்வாணையத்தால்‌ செல்லாததாக்கப்படும்‌.

ஆ. எந்த ஒரு தேர்வரும்‌ முற்பகலில்‌ நடைபெறும்‌ தேர்விற்கு 09.15 மணிக்குப்‌ பின்னர்‌ தேர்வுக் கூடத்திற்குள்‌ நுழையவோ 1.15 மணிக்கு முன்னர்‌ தேர்வுக் கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்‌. எந்த ஒரு தேர்வரும்‌ பிற்பகலில்‌ நடைபெறும்‌ தேர்விற்கு 02.15 மணிக்குப்‌ பின்னர்‌ தேர்வுக் கூடத்திற்குள்‌ நுழையவோ 5.15 மணிக்கு முன்னர்‌ தேர்வுக் கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌.

இ. விண்ணப்பதாரர்கள்‌ தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம்‌ அமைந்துள்ள இடத்தினை எளிதில்‌ தெரிந்துகொள்ளும்‌ பொருட்டு, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டல்‌, விரைவுத்தகவல்‌ குறியீடு அச்சிடப்பட்டுள்ளது. இகனை விரைவுத் தகவல்‌ குறியீட்டுச் செயலி மூலம்‌ ஸ்கேன்‌ செய்து தேர்வுக்கூடம்‌ அமைந்துள்ள இடத்தினை கூகுள் மேப்ஸ் மூலமாகத் தெரிந்துகொண்டு பயன்‌ பெறலாம்‌.

ஈ. தேர்வு அறைக்குள்‌ அலைபேசியைக் கொண்டுசெல்ல அனுமதியில்லை. எனவே விண்ணப்பதாரர்கள், தங்களது அலைபேசி உட்படப் பிற உடமைகளைத் தேர்வு மையத்திலுள்ள பாதுகாப்பு அறையில்‌ ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இருப்பினும்‌ சொந்த உடமைகளைப் பாதுகாப்பு அறையில்‌ வைப்பது தேர்வரின்‌ சொந்த பொறுப்பிற்கு உட்பட்டதாகும்‌.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டுஅலுவலர்‌ கிரண்‌ குராலா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x