Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் புதுவையில் நடைமுறைக்கு வருமா?

புதுச்சேரியில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை புதிய அரசாவது நடைமுறைக்கு கொண்டு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கடந்த 2009-ம் ஆண்டுநாடாளுமன்றத்தில் இயற்றப்பட் டது. கடந்த 1.4.2010-ல் அந்தசட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 8.11.2011-ல் இந்த சட்டத்தை அமல்படுத்தியது. இதுவரை நாடு முழுவதும் 20 மாநிலங்கள் இந்த சட்டத்தை நடை முறைப்படுத்தியுள்ளன. இதனால் தனியார் நடத்தும் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்களை இலவசமாக சேர்க்க முடியும்.

ஆனால், புதுச்சேரியில் கல்வி உரிமைச் சட்டம் இதுவரை நடைமுறையில் இல்லை. ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீதம் பள்ளியில் இடம் தருவதில்லை. கல்வி உரிமைச் சட்டத்தை இயற் றாததால் ஏழை குழந்தைகள் தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க வாய்ப்பில்லை.

இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது, “புதுச் சேரியில் தனியார் நிர்வாகத்தின் கீழ் 49 தொடக்கப் பள்ளிகள், 56 நடுநிலைப் பள்ளிகள், 107 உயர் நிலைப் பள்ளிகள், 73 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. இச்சட்டம் நடைமுறைக்கு வராததால் ஏழை குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இடமும்தரப்படுவதில்லை. இச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி கல்வித்துறை யில் பலவித போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. காங்கிரஸ் அரசும் இதை செயல்படுத்தவில்லை. தற்போது புதிய அரசு பொறுப் பேற்றுள்ளதால் அவர்களாவது நடைமுறைப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.

இதுதொடர்பாக தன்னார்வலர் கள் தரப்பில் விசாரித்தபோது, “புதுச்சேரி அரசு சார்பில் கடந்த27.10.2011-ல் இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் மட்டும் அரசிதழில் ஆணையாக வெளியானது. இதுதொடர்பாக சட்டப் பேரவையில் சட்டமோ, அரசாணையோ இதுவரை வெளியாக வில்லை. குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 2010 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இச்சட்டம் செயல்பாட்டுக்கு வந்தாலும் தனியார் பள்ளிகளுக்கு இதை பின்பற்ற 3 ஆண்டுகாலம் அவகாசம் அளிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டிலிருந்து அனைத்து தனியார் பள்ளிகளும் இச்சட்டப்படி செயல் பட்டிருக்க வேண்டும். இதனை ஏற்று புதுச்சேரி அரசு கடந்த 24.10.2011 அன்று புதுச்சேரி குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி விதிகளை வெளியிட்டுள்ளது.

ஆனால் இன்று வரை இச் சட்டத்தின் விதிமுறைகளை அரசுநிறைவேற்றவில்லை. புதிய கல்வி யமைச்சராவது இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x