Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

சென்னை ஐஐடி-ல் 10 லட்சம் பேருக்கு ஆன்லைனில் கணினி கோடிங் பயிற்சி: கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சி

சென்னை

பத்து லட்சம் பேருக்கு ஆன்லைனில் கணினி கோடிங் பயிற்சிஅளித்து, கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி இறங்கியுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திட்டம், ஐஐடி தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா ஆகியவை இணைந்து வரும் 24-ம் தேதி ஆன்லைனில் கணினி கோடிங் பயிற்சி அளிக்க உள்ளன.

இதில், பைத்தான் புரோகிராமிங் லாங்குவேஜைப் பயன்படுத்தி, முகம் அடையாளம் காணும் செயலியை உருவாக்குவது குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

கோடிங், பைத்தான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள், இந்த ஆன்லைன் கோடிங் பயிற்சியில் சேரலாம். இதற்கு எவ்வித வயது வரம்பும் கிடையாது. https://www.guvi.in/AI-for-India என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் 10 லட்சம் பேருக்கு கோடிங் பயிற்சி அளித்து, கின்னஸ் உலக சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான நேரத்தை தேர்வு செய்துகொள்ளலாம். அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

பைத்தான் புரோகிராமிங் லாங்குவேஜ் குறித்த அடிப்படைவிஷயங்களை அறிந்துகொள்ளும் வகையில், இலவச பைத்தான் கோர்ஸ் பயிற்சி பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று ஐஐடி பேராசிரியர் அசோக் ஜுஞ்சுன்வாலா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x