Last Updated : 23 Oct, 2020 03:42 PM

 

Published : 23 Oct 2020 03:42 PM
Last Updated : 23 Oct 2020 03:42 PM

இலவச இணையவழிக் கல்வி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு 

புதுச்சேரி

இலவச இணைய வழிக் கல்வி சேவையைப் பெற 10, 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பொதுத் தேர்வு வரை இக்குழந்தைகளுக்கு உதவவும் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்துப் புதுவை யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்புத் தலைவர் அருணாச்சலம், பொதுச்செயலாளர் துளசி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி வழியாகப் பாடங்களை நடத்தி வருகிறது. புதுவையில் இதுபோலப் பாடங்கள் நடத்தவில்லை. இணையவழிக் கல்வியைத் தனியார் பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் எங்கள் கூட்டமைப்பு 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காக இலவச இணையவழிக் கல்வி சேவையை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சேவையைப் பெற விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பெயர், பள்ளி, முகவரி, வாட்ஸ்அப் எண், இமெயில் முகவரிக்கு நாங்கள் அனுப்பும் படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம். இந்தச் சேவையைப் பெற விரும்பும் மாணவர்கள் 94898 94749 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டதற்கு, "பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளியில் படிப்போருக்கு உதவ இம்முயற்சியை கரோனா காலத்தில் எடுத்துள்ளோம். விருப்பம் உள்ளோருக்குத் தேர்வு வரை உதவ உள்ளோம். கணினி, செல்போன் வாயிலாகவும், தேவைப்படுவோருக்குத் தனிப்பட்ட முறையிலும் உதவவே இம்முயற்சி எடுக்கிறோம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x