Published : 05 Oct 2020 07:09 AM
Last Updated : 05 Oct 2020 07:09 AM

அக்.12-க்குள் நீட் தேர்வு முடிவு வெளியீடு: என்டிஏ அதிகாரிகள் தகவல்

நீட் தேர்வு முடிவுகள் அக்.12-ம் தேதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் கடந்த செப். 13-ம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14.37 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1.1 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகளை செப்.26-ம் தேதி தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை அக்.12-ம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டு, அதற்கான இறுதிக்கட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், கடந்த ஆண்டைவிட தற்போது நீட் கட்-ஆஃப் மதிப்பெண் உயரக் கூடும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x