Published : 01 Aug 2020 07:40 AM
Last Updated : 01 Aug 2020 07:40 AM

கொளப்பாக்கம் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100% தேர்ச்சி

போரூரை அடுத்த கொளப்பாக்கம் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியின் முதலாம் கல்வியாண்டு மாணவர்கள் அனைவரும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

2020-ம் கல்வியாண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 மாணவர்கள் 480-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 105 பேர் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவி ஏ.ஹரிணி 491 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஜே.ஜான் சில்வெஸ்டர் 490 மதிப்பெண்களுடன் 2-ம்இடமும், கே.ஜே. கவுசிகன் 488 மதிப்பெண்களுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

பொன்னேரி வேலம்மாள் வித்யாலயா

பொன்னேரி டிவிஐஎஸ் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இங்குதேர்வு எழுதிய 159 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 14 பேர் 480 மதிப் பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 22 பேர் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

கணிதத்தில் 5 பேரும், சமூக அறிவியலில் ஒருவரும், ஐடியில் 4 பேரும், இந்தியில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அபிபக்த தனய ஜீனா 490 மதிப்பெண்களுடன் முதலிடமும், டி.தேவா 488 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், பி.வி.குஷ்வந்த், அம்புஜ் சிங்தலா 486 மதிப்பெண்களுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

இப்பள்ளிகளின் வெற்றிக்கு வித்திட்டமாணவர்கள், ஆசிரியர்கள், ஒத்துழைப்பு நல்கியபெற்றோர் களுக்கு வேலம்மாள் கல்விக் குழும இயக்குநர் எம்.வி.எம்.சசிக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x