Published : 30 Jul 2020 10:21 am

Updated : 30 Jul 2020 10:21 am

 

Published : 30 Jul 2020 10:21 AM
Last Updated : 30 Jul 2020 10:21 AM

நீட் தேர்வுக்கு தயாராகிவரும் அரசுப் பள்ளி மாணவர்களின் வீட்டுக்கு சென்று ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள்

neet-exams
தஞ்சாவூர் மாவட்டம் புள்ளபூதங்குடியில் நீட் தேர்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவி சினேகாவின் வீட்டுக்குச் சென்று அறிவுரை கூறும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன். உடன், ஆசிரியர்கள் சித்ரா, சித்ரமுகி.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப் பள்ளி மாணவர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மருத்துவ படிப்பு களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அரசுப் பள்ளி மாணவர்கள் எழுத தயார் செய்யும் விதமாக கடந்த ஜூன் மாதம் முதல் ஆன்லைனில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.


ஜூலை 26-ம் தேதி நடைபெற இருந்த நீட் நுழைவுத் தேர்வு கரோனா ஊரடங்கால், செப்டம் பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, ஆன் லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 152 பேர் நீட் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இதில், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள புள்ளபூதங்குடி அரசுப் பள்ளி மாணவி சினேகா இப்பயிற்சி யில் முழுமையாக பங்கேற்றார். இதையடுத்து, அந்த மாணவியை ஊக்குவிக்கும் வகையில், தஞ் சாவூர் முதன்மைக் கல்வி அலுவ லர் ராமகிருஷ்ணன், ஆசிரியர்கள் சித்ரா, சித்ரமுகி மற்றும் துளசி ராமன் ஆகியோர் அம் மாணவி யின் வீட்டுக்குச் சென்று, அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

இதேபோல, மாவட்டத்தில் சிறப் பாகப் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் சென்று ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ் ணன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, கும்பகோணம் ஆகிய கல்வி மாவட்டங்களில் 152 மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். மாணவர்களின் சந்தேகங்களை தொலைபேசி மூலம் ஆசிரியர்கள் தீர்த்து வைக்கின் றனர். சிறப்பாகப் படிக்கும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர் மூலம் தனி யாக பாடங்களில் சந்தேகங்க ளைத் தீர்க்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதனால் மாணவர் கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மாணவர்களை ஊக்கப்படுத்த வும், அவர்களது சூழலை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பயிற்சி அளிக்கவும் அவர்களின் வீடு களுக்கே சென்று ஆசிரியர்கள் அறி வுரை வழங்கி வருகின்றனர் என்றார்.


தவறவிடாதீர்!

நீட் தேர்வுநீட் தேர்வு தயாராவதுபள்ளி மாணவர்களுக்கு வீடுஆசிரியர்கள் ஊக்கப்படுத்துவது

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author