Last Updated : 25 Feb, 2020 10:36 AM

 

Published : 25 Feb 2020 10:36 AM
Last Updated : 25 Feb 2020 10:36 AM

போட்டோஷாப் - (Key board short cuts)

பொதுவாக போட்டோஷாப்பில் வேலை செய்யும்போது மவுஸ் பயன்பாடு அதிகமாக இருக்கும். அவ்வப்போது விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் போட்டோஷாப்பில் வேலை செய்கையில் கீ-போர்டிலேயே குறுக்குவழிகளை (Key board short cuts) பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது Application Menus / Edit ல் உள்ள முக்கியமான சில ‘கீபோர்டு ஷார்ட் கட்’களை இங்கே பார்ப்போம்.

கீபோர்ட் குறுக்குவழிகள்: (Key board short cuts)
ஒரு படி முன்/பின் செல்ல : Ctrl+Z
பல படிகள் முன் செல்ல : Shift+Ctrl+Z
பல படிகள் பின் செல்ல : Alt+Ctrl+Z
வெளுப்பாக்க : Shift+Ctrl+F
வெட்ட : Ctrl+X
பிரதி எடுக்க : Ctrl+C
பல அடுக்கு பிரதிகளை எடுக்க : Shift+Ctrl+C
ஒட்டுவதற்கு : Ctrl+V
சிறப்பு ஒட்டுதல் : (Special paste)
வெட்டிய இடத்திலேயே ஒட்டிட : Shift+Ctrl+V
ஓர் இடத்தினுள் ஒட்டிட : Alt+Shift+Ctrl+V
நிரப்பி விட : Shift+F5
கண்டென்ட் அவேர் ஸ்கேல் : Alt+Shift+Ctrl+C
இலகுவாக மாற்றியமைக்க : Ctrl+T
மாற்றியமைக்க : (Transform)
திரும்பவும் அதே அளவு மாற்ற : Shift+Ctrl+T
வண்ண அமைப்புகள் : Shift+Ctrl+K
விசைப் பலகை குறுக்கு வழிகள் : Alt+Shift+Ctrl+K
பட்டியல் : Alt+Shift+Ctrl+M
விருப்பங்கள் : (Preference)
பொதுவானவை : Ctrl+K
தற்போது மெனுவில் உள்ள இமேஜுக்கான சில குறுக்கு வழிகளை பார்ப்போம்: இமேஜ் சரிசெய்தல் (Adjustments)
நிலைகள் : Ctrl+L
வளைவுகள் : Ctrl+M
சாய/செறிவூட்டல் : Ctrl+U
வண்ண இருப்பு : Ctrl+B
கருப்பு & வெள்ளை : Alt+Shift+Ctrl+B
புரட்டுதல் : Ctrl+I
டிசாட்ஜுரேட் : Shift+Ctrl+U
ஆட்டோ டோன் : Shift+Ctrl+L
ஆட்டோ காண்ட்ராஸ்ட் : Alt+Shift+Ctrl+L
ஆட்டோ வண்ணம் : Shift+Ctrl+B
இமேஜின் அளவு : Alt+Ctrl+I
கேன்வாஸ் அளவு : Alt+Ctrl+C
தற்போது மெனு அடுக்குகளில் உள்ள சில குறுக்கு வழிகளைப் பார்ப்போம்: அடுக்குகள் (Layers)
அடுக்கு : Shift+Ctrl+N
பிரதி வழி அடுக்கு : Ctrl+J
வெட்டு வழி அடுக்கு : Shift+Ctrl+J
உருவாக்க / க்ளிப்பிங் மாஸ்க் : Alt+Ctrl+G
குழு அடுக்கு : Ctrl+G
குழு அடுக்கைக் கலைக்க : Shift+Ctrl+G
ஏற்பாடு (Arrange):
அனைத்துக்கும் முன்னால் வர : Shift+Ctrl+]
ஓர் அடுக்குக்கு மேலே வர : Ctrl+]
அனைத்துக்கும் பின்னால் செல்ல : Shift+Ctrl+[
ஓர் அடுக்குக்குக் கீழே செல்ல : Ctrl+[
பல அடுக்குகளை ஓர் அடுக்காக்க : Ctrl+E
தென்படும் அடுக்குகளை ஒன்றாக்க:Shift+Ctrl+E

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x