Published : 18 Feb 2020 09:53 AM
Last Updated : 18 Feb 2020 09:53 AM

பாகிஸ்தானில் மிகப்பெரிய அளவில் போலியோ ஒழிப்பு முகாம்

இந்தியா போன்ற நாடுகளில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், நைஜிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இன்னும் பரவலாக உள்ளது.

இந்நிலையில், 5 வயதுக்குட்பட்ட 3.96 கோடி குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ‘போலியோ ஒழிப்பு முகாம்’ திட்டத்தை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் சுகாதார சேவைகள் தொடர்பான பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்சா கூறுகையில், “போலியோவை ஒழிப்பதற்காக சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் தொழிலாளர்கள் வீடு வீடாகச்சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்துவருகின்றனர்” என்றார். பாகிஸ்தானில் போலியோ சொட்டுமருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் என தவறான கருத்து நிலவி வருகிறது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மட்டும் 144 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் சுற்றுலாவை மேம்படுத்த 50 சாகச விளையாட்டு தலங்கள்

திருவனந்தபுரம்

கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:

கேரளாவில் உள்ள இயற்கையை ரசிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். கேரளாவில் சுற்றுலாவை உலகளாவிய தரத்தில் மேம்படுத்த 50 பெரிய சாகச விளையாட்டு மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மையங்கள் கேரள வனபாதுகாப்பு சட்டத்தின் படி பாதுகாப்பான மற்றும் தொந்தரவில்லாத இடங்களில் அமைக்கப்படவுள்ளது.இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் மையங்கள் செயலுக்கு வரும். இவ்வாறு அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x