Published : 14 Feb 2020 10:10 AM
Last Updated : 14 Feb 2020 10:10 AM

பெண்கள் குழந்தைகள் நலனை மேம்படுத்த சிஐஎப்எப் நிறுவனத்துடன் இணைகிறது ராஜஸ்தான் அரசு

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி மற்றும் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்த சிஐஎப்எப் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பெண் குழந்தைகளுக்காக கல்வி மற்றும் ஊட்டசத்து அளவை மேம்படுத்துவதற்காக குழந்தைகள் முதலீட்டு நிதி அறக்கட்டளை (சிஐஎப்எப்) என்ற தனியார் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு அடிஸ் அபாபா, பெய்ஜிங், லண்டன், நைரோபி, டெல்லி உள்ளிட்ட இடங்களில் செயல்படுகிறது.

இந்நிலையில், சிஐஎப்எப் அமைப்பின் பிரநிதிகளுடன் ராஜஸ்தான்மாநில முதல்வர் அசோக் கெலாட் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து, முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநில வருகால சந்ததியினரை ஆரோக்கியமாகவும் வளமாகவும் மாற்றும் கடமை அரசுக்குஉள்ளது. இதனால், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கும், அவர்களின் ஊட்டச்சத்து அளவைமேம்படுத்துவதற்கும் அரசு முன்னுரிமை கொடுக்க உள்ளது.

ஏற்கனவே பெண் குழந்தைகளின் நலனில் ராஜஸ்தான் அரசு கவனம் செலுத்தி வந்தாலும், சிஐஎப்எப் போன்ற சர்வதேச நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும்போது, மாநிலத்தின் வளர்ச்சியில் சிறந்த முடிவுகளை அடைய முடியும்.

அதேநேரத்தில், ​ சிஐஎப்எப் தலைமை நிர்வாக அதிகாரி கேட் ஹாம்ப்டன், பெண்கள் மற்றும் குழந்தகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து முதலீடுசெய்ய தனது அறக்கட்டளை விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், தாய்மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை ஹாம்ப்டன் பாராட்டினார். இவ்வாறு முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x