Published : 12 Feb 2020 11:12 AM
Last Updated : 12 Feb 2020 11:12 AM

உயர்கல்விக்கு திறவுகோல்-15: ஒருங்கிணைந்த எம்.பி.ஏ படிக்கலாம்!

அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பு நடத்தும் தேசிய அளவிலான ‘இளநிலை தகுதித் தேர்வு’ (UGAT-Under Graduate Aptitude Test) மூலம் ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., உட்பட பல்வேறு படிப்புகளில் சேரலாம்.

பி.பி.ஏ., பி.ஹெச்.எம்.,(ஹோட்டல் மேனேஜ்மெண்ட்), பி.காம்., பி.சி.ஏ., உட்பட பல்வேறுஇளநிலை படிப்புகளுக்கு இந்த தகுதித் தேர்வின் மதிப்பெண்கள் உதவும். தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும், அகில இந்திய மேலாண்மைகூட்டமைப்புடன் இணைவு பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்விநிறுவனங்களில் மாணவர்கள் சேரலாம்.

விண்ணப்பிக்கத் தகுதி

குறைந்தபட்ச தகுதியாக, பிளஸ் 2 தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போதுபிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதித் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடைபெறும். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர், அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று, அதில் உள்ள வழிகாட்டுதலின்படி விண்ணப்ப நடைமுறைகளை தொடரலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்போர், அதற்கான இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவு செய்து, விண்ணப்ப நடைமுறைகளைத் தொடங்கலாம். விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைப்பதுடன், ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தலாம். வரைவோலை வசதியும் உண்டு. நிறைவாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அச்செடுத்து வைத்துக்கொள்வது, கலந்தாய்வு நடைமுறைகளில் உதவும்.

தேர்வு நடைமுறைகள்

தேர்வுக்கான பாடத் திட்டத்தில் English language, Numerical and data analysis, Reasoning and intelligence, General knowledge, Service aptitude, Scientific aptitude உள்ளிட்டவை அடங்கும். சரியான விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் கொள்குறி வகையிலான 130 வினாக்கள் வினாத்தாளில் இடம்பெறும். தேர்வு காலம்: 2 மணி நேரம். தவறான விடைக்கு மதிப்பெண் கழிக்கும் நடைமுறை உண்டு.

சில படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் தற்போது தொடங்கி உள்ளன. பி.பி.ஏ.,-க்கு ஏப்ரல் 29 அன்று முதல் விண்ணப்பிக்கலாம். அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 1. தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதி அட்டையினை மே 2 அன்று ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 1 மே 2020
தேர்வுக் கட்டணம்: ரூ.650.
தேர்வு நேரம்: 2 மணிநேரம்.
தேர்வு நாள்: மே 9.
ஆன்லைனில் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 24 மே 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க https://apps.aima.in/Ugat2020/
கூடுதல் விவரங்களுக்கு https://www.aima.in/testing-services/ugat/information-to-candidates-for-ugat.html

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x