Published : 10 Feb 2020 08:15 AM
Last Updated : 10 Feb 2020 08:15 AM

சுற்றுலா துறை சார்பில் 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்தது

சுற்றுலா துறையில் சார்பில் தாம்பரம் அருகே ஒரேநேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான பரதநாட்டியம் புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்தது.

தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் *சதிர் 10000* என்ற தலைப்பில் 10,000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, நடனப்பள்ளி மாணவிகள் ஒரேஇடத்தில் பரதநாட்டியம் ஆடும் கின்னஸ் உலகசாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கம் எஸ்ஐவிஇடி கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கின்னஸ் நடுவர் சோப்பியா கலந்து கொண்டு பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனையை நேரடியாக பார்வையிட்டார். இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலா துறை இயக்குநர் வி.அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சிதம்பரத்தில் 7190 பேர் கலந்து கொண்டு ஒரே இடத்தில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடத்தியதே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது.அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 10,176 பேர்கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட பரதநாட்டியம் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x