Published : 07 Feb 2020 10:25 AM
Last Updated : 07 Feb 2020 10:25 AM

உலக சிக்கன நாள் விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வழங்கினார்

உலக சிக்கன நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். அருகில் சிறுசேமிப்பு உதவி இயக்குநர் ரா.சாந்தி உள்ளார்.

திருச்சி

திருச்சியில் உலக சிக்கன நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பரிசுகளை வழங்கினார்.

சிறு சேமிப்புத் துறை சார்பில் ஆண்டுதோறும் உலக சிக்கன நாள் அக்டோபர் 30-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, நாடகம், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 49 பேருக்கு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர்சு.சிவராசு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உதவிஇயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு)ரா.சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:

பேச்சுப் போட்டி: ஆர்.மஞ்சுஸ்ரீ- புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.யுவபாரதி- பாய்லர் பிளான்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. எஸ்.ஷகில் அகமது- புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.

நடனப் போட்டி: எஸ்.ஹரிதா, டி.பிருந்தா, கே.மாலதி, எஸ்.நிஷாந்தி, எஸ்.பிரித்தி வில்பிரட், ஏ.மெர்சியா, ஜி.பிரியங்கா, சி.நிஷா- பொன்மலை திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

ஒய்.சங்கவி, பி.பத்மஹரிணி- சாவித்திரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

எஸ்.நாகலட்சுமி, ஆர்.உமாமகேஸ்வரி, எஸ்.பிரியதர்ஷினி, பி.மோனிகா, கே.நவநாயகி, எஸ்.சோலை அஸ்வினி,ஜி.ஆர்.தமிழழகி, கே.புவனேஸ்வரி- புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

கட்டுரைப் போட்டி: காவியா- சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரா.சி.லோகேஷ்- புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, ஜே.லென்ஸி பெர்லின்- தூய வளனார் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

நாடகப் போட்டி: இ.பு.பவஹரிணி, ஜா.தபித்தா ஜூடித், சபினியா ச.ராய், ம.அல்தாப் ஷாஹிரா, ஜெ.ஜெனட் ஏஞ்சல், ரா.காவியா, சே.ராதிகா, ர.ஷாஜிதா, க.ஜனனி, வி.ராதிகா- திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

ஆர்.ஷோபனா, ரம்ஜான் பேகம், எஸ்.யோகப்பிரியா, எம்.புவனேஸ்வரி, எம்.யமுனா லட்சுமி, ஐ.ஐஸ்வர்யா, எஸ்.விஜயலட்சுமி- சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

ஆர்.தீபிகா, ஆர்.ஜெயலட்சுமி, கே.காவியபிரியா, எஸ்.காவ்யா, ஆர்.புவனேஸ்வரி, ஜெ.அகல்யா, எம்.ஹரிணி, ஜி.ஹரிணி- ரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x