Published : 05 Feb 2020 07:34 AM
Last Updated : 05 Feb 2020 07:34 AM

தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத் திறனாளிகள் 2 லட்சம் பேர் விண்ணப்பம்

கோப்புப்படம்

சென்னை

தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி உதவித் தொகை,திருமண உதவித் தொகை, அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை உள்ளிட்டபல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மாற்று திறனாளிகள் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான காலவிரயத்தை குறைக்கவும், அவர்களின் விவரங்களைச் சேகரிக்கவும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தது.

இப்பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்கும்படி அனைத்துமாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் இதுவரை 1 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இப்பணிகளை விரைவுபடுத்த கடந்த மாதம் 21 முதல் 31-ம் தேதி வரை தமிழகம்முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் தேசிய அடையாள அட்டை பெற 2 லட்சம்மாற்று திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரிஒருவர் கூறியதாவது: சிறப்பு முகாம்களில் 2 லட்சம் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு விரைவில் தேசியஅடையாள அட்டை வழங்கப்படும்.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் வாராந்திர குறைதீர் கூட்டங்கள், மாவட்டமாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்அலுவலகம்ஆகிய இடங்களில்விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x