Published : 03 Feb 2020 09:10 AM
Last Updated : 03 Feb 2020 09:10 AM

திருப்பத்தூர் தோமினிக் சாவியோ பள்ளி ஆண்டு விழா; இந்தியா வல்லரசு நாடாக பாடுபட வேண்டும்: மாணவர்களுக்கு ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு அறிவுரை

இந்தியா வல்லரசு நாடாக மாற மாணவர்கள் பாடுபட வேண்டும் என்று திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறினார்.

திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாமற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சகாயராஜ் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி டில்லிபாபு கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்களின் வெற்றிக்காக பாடுபடுவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. ஆசிரியரை மதிக்கும் தேசம்தான் முன்னேற்றம் அடையும். பண்டைய காலத்தில் வல்லரசு நாடாக திகழ்ந்த இந்தியாஇன்று வளரும் நாடு பட்டியலில்இடம் பெற்றுள்ளது. உலகில் முதல் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ளதட்சசீலத்தில் உருவானது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் 30 நாடுகளைச் சேர்ந்தமாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்தியா அறிவியல் தொழில் நுட்பதுறையில் உலகில் முதல் 10 நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில், 7 நாடுகளில் தான் அதிநவீனபோர் விமானத்தை வடிவமைக்கக்கூடிய தொழில் நுட்பம் உண்டு அதில்இந்தியாவும் ஒன்று. இது நமக்குபெருமை அளிக்கக்கூடியது.

நிலவுக்கு விண்கலம் அனுப்பிய 6நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேபோல, ஏவுகணை தொழில் நுட்பம் கொண்ட 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகளவில் இந்தியா, ரஷ்யா ஆகிய 2 நாடுகளில் மட்டுமே மிகவேமாக பறக்கக்கூடிய ஏவுகணைகள் இருக்கின்றன.

இதுபோல பல சாதனைகளை நம்நாடு படைக்க வேண்டும் எனில் இன்றைய மாணவர்கள் போர் வீரர்கள் போல் செயல்பட வேண்டும். உலகளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. இதனால் உலகின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளது. அதை சாதனைகளாக மாற்றி நம் நாட்டை மீண்டும் வல்லரசாக மாற்றமாணவர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு டில்லிபாபு கூறினார்.

இவ்விழாவில், 6 வகுப்பு முதல் 12-ம்வகுப்பில் கல்வியில் சிறந்து விளங்கிமுதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘அடுத்த கலாம்’, ‘எந்திர தும்பிகள்’ ‘போர் பறவைகள்’, ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’ ஆகிய புத்தங்கள்பரிசாக வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x