Published : 01 Feb 2020 07:39 AM
Last Updated : 01 Feb 2020 07:39 AM

உணவு கலப்படத்தை கண்டறிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண்களுக்கு வழிமுறை பயிற்சி

சென்னை

உணவு கலப்படத்தை கண்டறிவதற் கான எளிய வழிமுறைகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறையின் மூலம், உணவு கலப்படம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு, உணவு பொருட்களில் கலப் படத்தை கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள் குறித்து செவிலியர்கள் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும்பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் தேன், பால் உள்ளிட்ட 18 வகையான உணவு பொருட்களில் கலப்படங்களை கண்டறிவதற்கான வழிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறும்போது, “உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டறிவதற்கான எளிய வழிகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளித்துள்ளோம். தற்போது, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரடியாக சென்று 64 ஆய்வுகள் மூலம் 18 வகையான உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டறிவதற்கான எளிய வழிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.

64 வகையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான உபகர ணங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பிப்ரவரி இறுதிக்குள் விநியோகம் செய்யப்படும். அதன் பிறகு, வாரம் ஒரு நாள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கலப்படத்தை கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள் குறித்து செவிலியர்கள் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x