Published : 29 Jan 2020 03:38 PM
Last Updated : 29 Jan 2020 03:38 PM

மதுரை தனியார் பள்ளியில் ஒரு மணி நேரத்தில் 6 ஆயிரம் மாணவர்கள் மர ஓவியத்தில் வண்ணம் தீட்டி கின்னஸ் சாதனை

மதுரை

சிஇஒஏ பள்ளி மாணவர்கள் ‘மரங்களை காப்போம்; உலகைக் காப்போம்’ எனும் தலைப்பில் ஒரு மணிநேரத்தில் 6210 மர ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டி கின்னஸ் சாதனைக்கு படைத்தனர்.

மதுரை கோசாகுளம், மீனாம்பாள்புரம், மேலூர், காரியாபட்டி, சாத்தூரில் உள்ள சிஇஒஏ பள்ளிகளைச் சேர்ந்த 6210 மாணவர்கள் நேற்று (திங்கள் கிழமை) ரிசர்வ் லைன் ஆயுதப்படை மைதானத்தில் கின்னஸ் சாதனை செய்வதற்கு ஒன்று கூடினர்.

பள்ளிகளின் நிறுவனத் தலைவர் ராஜா கிளைமாக்சு, துணைத்தலைவர் இ.சாமி தலைமை வகித்தனர். கின்னஸ் அமைப்பின் நடுவர் சுவாப்னில் டன்கரிக்கர் முன்னிலையில் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 3ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் 6210 மாணவர்களும் ஒரே நேரத்தில் ‘மரங்களை காப்போம்,பூமியைக் காப்போம்’ என்ற தலைப்பில் பேப்பரில் உள்ள மரப் படத்திற்கு வர்ணம் தீட்டி சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.

இதற்கு முன்னர், நெதர்லாந்து நாட்டில் 2000 மாணவர்கள் ஓரிடத்தில் கூடி இதேபோல் மரங்களின் படத்ததிற்கு வண்ணம் தீட்டி கின்னஸ் சாதனை படைத்தனர். அதனை முறியடிக்கும் வகையில் சிஇஒஏ பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை முயற்சியை கோசாகுளம் பள்ளியின் முதுநிலை முதல்வர் ஹேமா ஆட்ரி மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x