Published : 24 Jan 2020 10:56 AM
Last Updated : 24 Jan 2020 10:56 AM

செய்திகள் சில வரிகளில்: சீனாவில் 2 நகரங்களுக்கு போக்குவரத்து தடை

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி, இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க சீனா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வூஹான் மற்றும் வுஹாங்காங் ஆகிய 2 நகரங்களில் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து ஆகியவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மிக அத்தியாவசிய தேவையை தவிர, பிற காரணங்களுக்காக யாரும் நகரை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், நகருக்குள் வெளி நபர்கள் செல்லவேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் காணவில்லை

பெக்கன்பரு

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் 20 புலம்பெயர்வு தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு கவிழ்ந்துவிட்டது. இதுகுறித்து உள்ளூர் மீட்பு படை அதிகாரி லேனி தடிகா கூறுகையில், “படகில் பயணம் செய்த 20 பேரில் 10 பயணிகள் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 10 பேர் இன்னும் காணவில்லை” என்றார்.

இதற்கிடையில் படகில் புலம்பெயர்ந்த மக்கள் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. இதில் வழக்கமாக இந்தோனேசியாவில் இருந்து வேலை தேடி மலேசியாவுக்கு கடல் வழியாக செல்பவர்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்கின்றனர்.

ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x