Published : 22 Jan 2020 10:30 AM
Last Updated : 22 Jan 2020 10:30 AM

வளர்ச்சி நிதியை முறையாக பயன்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை: மகாராஷ்டிர அமைச்சர் எச்சரிக்கை

வளர்ச்சி நிதியை முறையாக பயன்படுத்தாத அரசு அதிகாரிகள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் தானே மாவட்ட வளர்ச்சிக்கான திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் தானே மாவட்ட நகர்புறவளர்ச்சிக்காக ரூ. 475 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஏக்நாத் அதிகாரிகளிடம், “நகர்புற வளர்ச்சி நிதியை முறையாக பயன்படுத்தாத அரசு அதிகாரிகள் மற்றும்அலுவலர்கள் மீது துறை ரீதியாககடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீயணைப்பு வசதிகள் இல்லாத கிராமப்புறங்களை அடையாளம் கண்டு, அங்கு தீயணைப்பு வசதியை மேம்படுத்த தேவையான வரைவு அறிக்கையை தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், கிராமம்- நகரச்சாலை வரைபடத்தை தயாரிக்கவும், சூரிய சக்தியைப் பயன்படுத்தவும், அதை உருவாக்குவது குறித்தும் தானே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

தானேவில் மலையேற்றத்தின்போது ஏற்படும் விபத்துக்களை குறைக்கவும், புதிய நீர் ஆதாரங்களை ஆராய்ந்து அதற்கான கணக்கெடுப்பை மேற்கொள்ளவும், தற்போதுள்ள நீர் நிலையங்களை ஆழப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x