Published : 08 Jan 2020 11:04 AM
Last Updated : 08 Jan 2020 11:04 AM

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்கள் நீதிபதியாக நியமனம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பெண்கள் நியூயார்க் நகரின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூ யார்க் நகரத்துக்கான குடும்பநல நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிவில் நீதிமன்றம் ஆகிய வற்றுக்கு 28 புதிய நீதிபதிகளை நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ ஜனவரி 1-ம் தேதி நியமித்து உத்தரவிட்டிருந்தார்.

அதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். நியூயார்க் நகரத்தின் குற்றவியல் நீதிபதியாக அர்ச்சனா ராவ் மற்றும் சிவில் நீதிபதியாக தீபா அம்பேகர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிவில் நீதிபதி இடைக்கால சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2019-ம் ஆண்டு அர்ச்சனா ராவ் பதவி வகித்தார். முன்னதாக அவர் கவுன்ட் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் 17 ஆண்டுகளும், நிதி மோசடி பணியகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அதேபோல், இடைக்கால சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2018-ம் ஆண்டு தீபா அம்பேகர் பணி அமர்த்தப்பட்டார்.

அதற்கு முன்பாக நியூயார்க் நகர சபையில் மூத்த சட்டப்பேரவை வழக்கறிஞராகவும், பொது பாதுகாப்பு குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க அரசில் பல்வேறு பதவி வகித்த 2 பெண்களும் தற்போது நியூயார்க் நகரத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x