Last Updated : 07 Jan, 2020 12:26 PM

 

Published : 07 Jan 2020 12:26 PM
Last Updated : 07 Jan 2020 12:26 PM

தேசத்தை வலிமையாக்கவே புதிய கல்விக் கொள்கை : அமைச்சர் பொக்ரியால்

தேசத்தை வலிமையாக்கவே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் நேற்று பேசிய அவர், ''சுமார் 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய கல்விக்கொள்கை வெளியாக உள்ளது. இது இந்தியாவின் பழங்கால நெறிமுறைகள் மற்றும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. தேசத்தை பலப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விக்கொள்கை தொடர்பாக பொதுவெளியில் பரிந்துரைகளும் கோரப்பட்டுள்ளன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஆலோசனை வழங்கப்படும் ஒன்றாக இருக்கும். இந்தியாவில் 1000 பல்கலைக்கழகங்கள், 45 ஆயிரம் கல்லூரிகள், 16 லட்சம் பள்ளிகள், சுமார் 1 கோடி ஆசிரியர்கள், 33 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம்.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள், இந்தியாவை உயரத்துக்கு இட்டுச்செல்லும். பள்ளிகளில் கற்பிக்கப்படும் தொழிற்கல்வி மூலம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும்'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x