Published : 07 Jan 2020 11:13 AM
Last Updated : 07 Jan 2020 11:13 AM

சர்வதேச செஸ்ஸில் மகேஷ் சாம்பியன்

ஹேஸ்டிங்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான பி.மகேஷ் சந்திரன் சாம்பியன் பட்டம் வென்றார். 95-வது ஹேஸ்டிங்ஸ் சர்வதேச செஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியாவின் பி.மகேஷ் சந்திரன் கடைசி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த ஸ்டானியை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தை 33-வது நகர்த்தலின் போது டிரா செய்தார் மகேஷ் சந்திரன். இதன் மூலம் 9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்ற மகேஷ் சந்திரன் சாம்பியன் பட்டம் வென்றார்.

முன்னதாக 8-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த தீப் சென்குப்தாவை வீழ்த்தியிருந்தார் மகேஷ் சந்திரன். இந்தத் தொடரில் 6 வெற்றிகள், 3 டிராக்களை பதிவு செய்து பட்டத்தை கைப்பற்றியுள்ளார் மகேஷ் சந்திரன். தீப் சென்குப்தா 13-வது இடமும், மற்றொரு இந்திய வீரரான சுயம்ஸ்மிஸ்ரா 14-வது இடமும் பிடித்தனர். இருவரும் தலா 6 புள்ளிகள்
பெற்றனர்.

பிரான்சின் ரோமெய்ன் எட்வார்ட் 7 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார். 3-வது இடத்தை 6.5 புள்ளிகளுடன் கன்டர் ஜெர்ஜெலி (ஹெங்கேரி), வில்லியம்ஸ் சைமன் (இங்கிலாந்து), பகி மேட் (ஹெங்கேரி), ஸ்டானி (இந்தியா) ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான மகேஷ் சந்திரன் கடந்த 2006-ம் ஆண்டு இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனார். அதன் பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். தற்போது வட கலிபோர்னியாவில் வசித்து வரும் மகேஷ் சந்திரன் அங்கு செஸ் அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x