Published : 06 Jan 2020 10:04 AM
Last Updated : 06 Jan 2020 10:04 AM

அறிவியல் மாத இதழுக்கு மாணவர்கள் கட்டுரை அனுப்பலாம்

கோப்புப்படம்

கோவை

அறிவியல் இதழுக்கு கட்டுரைகள் எழுதபள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அறிவியல் நகரம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான 'எங்கும் அறிவியல்' என்ற மாத தமிழ் இதழ் வெளியிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அறிவியல் கருத்துகள் சார்ந்த கட்டுரைகளை எழுதலாம்.

இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் அறிவியல் மற்றும் அறிவியல் தமிழ் குறித்த விழிப்புணர்வும், அறிவியல் தமிழ்ச் சொற்களின் பண்பாடும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் 6 ஆயிரம்பிரதிகள் அச்சிட்டு வழங்கப்படும். இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளஅரசு, அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் மாதழ் இதழ் தொடர்பாகதகவல் அனுப்ப வேண்டும் எங்கும் அறிவியல் என்ற மாத இதழை பள்ளிக்கு ஒன்று அல்லது இரண்டு வீதம் வாங்கும்வகையில், தலைமை ஆசிரியர்கள் அதற்கான சந்தா தொகை வரைவோலையாகசெலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x