Published : 06 Jan 2020 09:54 AM
Last Updated : 06 Jan 2020 09:54 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு: கவாஸ்கரின் முதல் தொடர்

பி.எம்.சுதிர்

1971-ம் ஆண்டில் தங்கள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியை உற்சாகமாக வரவேற்றது மேற்கிந்திய தீவுகள் அணி. அதற்கு முன் நடந்த தொடரில் இந்தியாவை 5-0என்ற கணக்கில் மேற்கிந்தியதீவுகள் ஊதித் தள்ளியிருந்ததே இந்த உற்சாகத்துக்கு காரணம். அதேபோல்இந்த முறையும் இந்தியாவைஎளிதாக வீழ்த்தலாம் என்றுஅவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் கவாஸ்கரின் வருகை அதை தலைகீழாக்கி விட்டது.

இந்த டெஸ்ட் தொடரில்தான் ஆடிய முதல் ஆட்டத்தில் 2 அரைசதங்களை (65, 67) அடித்த கவாஸ்கர், அதற்கடுத்த போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகளை துவைத்து எடுத்தார். 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த முதல் தொடரில் மட்டும் 4 சதங்கள் உட்பட 774 ரன்களைக் குவித்தார் கவாஸ்கர். அவரது உக்கிரமான பேட்டிங்கால் இந்திய அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்களும் முக்கிய காரணமாய் இருந்தனர். வெங்கட்ராகவன், பிரசன்னா, பேடி என்ற இந்தியாவின் மூவர் கூட்டணி, தங்களின் அதிரடி பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகளை திணறடித்தது.

மேற்கிந்திய தீவுகளில் தொடரை வென்ற இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்துக்கு பறந்தது. சுழற்பந்து வீச்சாளரான சந்திரசேகரின் அபார பந்துவீச்சால் இந்திய அணி இந்த தொடரையும் கைப்பற்றியது. மொத்தத்தில் இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாக 1971 அமைந்தது.

அதேநேரத்தில் 1971-ம் ஆண்டு, உலக கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டில்தான் முதல் முறையாக 60 ஓவர்களைக் கொண்ட (முதலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தது) ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் நடத்தப்பட்டது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்றிருந்ததால் இத்தொடரில் சிறப்பாக ஆடினார்கள். ஆனால் டெஸ்ட் போட்டிகளைத் தவிர வேறெதுவும் அறியாத இந்திய அணியோ, அப்போட்டிகளில் காட்டிய அதே நத்தை வேகத்தை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் காட்டியது.

முக்கியமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுனில் கவாஸ்கர், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 60 ஓவர்களும் பேட்டிங் செய்து 36 ரன்களை மட்டுமே சேர்த்தார். இப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 334 ரன்களை குவிக்க, இந்திய அணியோ 60 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x