Published : 02 Jan 2020 10:06 AM
Last Updated : 02 Jan 2020 10:06 AM

தேசிய அளவிலான கபடி போட்டியில் கும்பகோணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

ஊரக விளையாட்டில்14 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமியர் கபடியில் தமிழக அணி தங்கப் பதக்கம் வென்றது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் 6-வது ஊரக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஹரியாணா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமியர் கபடி போட்டியில் தமிழகத்தின் சார்பில் விளையாடிய கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி மாணவிகள் காஞ்சனா, தரணி, ஆர்த்தி, தேவனாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் ப்ரீத்தா, கிரிஜாதேவி, ஜெயஸ்ரீ, கும்பகோணம் தூயவளனார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவா, திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா, திருப்பனந்தாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுஹாசினி ஆகியோர் அடங்கிய அணி தங்கப் பதக்கம் வென்றது.

வெற்றியுடன் கும்பகோணத்துக்கு திரும்பி வந்த மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களான யு.அசோக், எஸ்.சூர்யா, வி.சுந்தர்ஆகியோர் தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சாக்கோட்டை க.அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் க.அன்பழகன் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x