Published : 30 Dec 2019 05:23 PM
Last Updated : 30 Dec 2019 05:23 PM

புத்தாண்டை அறிவியலுடன் கொண்டாடலாம்: கலங்கரை விளக்கத்தில் அறிவியலை அறியும் சுற்றுலா

புதுச்சேரி

புதுவை அறிவியல் இயக்கம் புதுவையின் மிக உயர்ந்த கோபுரமான புதிய கலங்கரை விளக்கத்தில் புத்தாண்டை அறிவியலை அறியும் சுற்றுலாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் ஜனவரி 1-ம் தேதி பிற்பகல் 2 முதல் 5 வரை புதிய கலங்கரை விளக்கத்தில் நடக்கிறது.

புதுச்சேரி துப்பராயப் பேட்டையில் உள்ள புதிய கலங்கரை விளக்கத்தில் புதுச்சேரி அறிவியல் இயக்கம் புத்தாண்டையொட்டி புதிய அறிவியல் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. விண்ணப் படிவம் மூலம் பூர்த்தி செய்துள்ள நூறு குழந்தைகளுக்கு இக்கலங்கரை விளக்கத்தில் வரும் 1-ம் தேதி மதியம் 2 முதல் மாலை 5 வரை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இதற்குக் கட்டணம் ஏதுமில்லை.

இதுகுறித்து புதுச்சேரி அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி கூறுகையில், "கலங்கரை விளக்கத்தின் வரலாறு தொடங்கி கடலில் இருப்போர் கலங்கரை விளக்கத்தை தொடர்பு கொள்ளும் அறிவியல் முறைகள் வரை மாணவர்களுக்கு விளக்க உள்ளோம்.

அத்துடன் கலங்கரை விளக்கத்தில் இருந்து விழும் நிழல் மூலம் அதன் உயரத்தைக் கணக்கிடல், கடலில் நிறம் மாறும்போது அதில் விழும் கலங்கரை விளக்க ஒளியின் விவரம், புதுச்சேரி சூரியன் அஸ்தமிக்கும் நேரம், இங்கிருந்து பார்க்கும் நட்சத்திரம், கோள் விவரங்கள், சூரியன் மறைவுக்கு பிறகு பறவைகள் செயல்பாடு எனப் பல விதமான அறிவியல் நிகழ்வுகளை புத்தாண்டையொட்டி குழந்தைகளுடன் கொண்டாட உள்ளோம்.

இதுதொடர்பாக மேலும் தகவல் அறிய விரும்புவோர் hemavathipondy@gmail.com என்ற மெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x