Published : 30 Dec 2019 07:06 AM
Last Updated : 30 Dec 2019 07:06 AM

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு: எளிதாக இருந்ததாக தேர்வர்கள் மகிழ்ச்சி

மத்திய அரசுப்பணிகளில் பட்டயக் கணக்காளர், ஆய்வாளர், புள்ளியியல் அதிகாரி, போதைப் பொருள் தடுப்புப்பிரிவு ஆய்வாளர், வருமானவரித் துறை ஆய்வாளர் உட்பட 21 பணிகளில் காலியாக உள்ள 11,271 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட தேர்வு கடந்த ஜூன் 4 முதல் 19-ம் தேதி வரையும், 2-ம்கட்ட தேர்வு செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரையும் நடைபெற்றது. இவற்றில் தேர்வானவர்களுக்கான இறுதிகட்ட தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வை நாடு முழுவதும் டெல்லி, சென்னை, மும்பை உட்பட நகரங்களில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 4,400 பேர் தேர்வு எழுதினர்.

கட்டுரை வடிவிலான தேர்வுகள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களின் பட்டியல் ssc.nic.in இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x