Published : 19 Dec 2019 03:34 PM
Last Updated : 19 Dec 2019 03:34 PM

அலையாத்தி காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?- பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வனத்துறை

அலையாத்திக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து ராமநாதபுரம் வனத்துறை சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வன உயிரின காப்பாளர் அசோக் குமார் அறிவுரையின் அடிப்படையில் அலையாத்தி காடுகளை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து பள்ளி திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி குழந்தைகள் மத்தியில் அதிகாரிகள் பேசினர்.

அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் கடல் பசு கடல் குதிரை கடல் அட்டை மற்றும் அலையாத்தி காடுகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களுக்கு வனச்சரக அலுவலர் எடுத்துரைத்தார்.

மேலும், ரூ.30,000 மதிப்புள்ள விளையாட்டுப் பொருட்கள் ( இறகுப்பந்து கிரிக்கெட் சாதனங்கள் , சதுரங்க பொருட்கள், கைப்பந்து கால்பந்து ) பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனவர் மதிவாணன், வனவர் சந்துரு ராஜா, வனக்காப்பாளர் ஜோசப் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் காரங்காடு அமல அன்னை உயர்நிலைப் பள்ளிக்கு நூலகத்தில் புத்தகங்கள் வைக்க இரும்பு அலமாரிகள் வழங்கப்பட்டன. காரங்காடு ஆர்சி துவக்கப் பள்ளிக்கு 5 மின் விசிறிகள் குழந்தைகளின் நலன் கருதி வழங்கப்பட்டன.

காரங்காடு சூழல் சுற்றுலாவில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் அலையாத்தி காடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் வனத்துறையால் இவ்வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x