Published : 09 Dec 2019 10:07 AM
Last Updated : 09 Dec 2019 10:07 AM

பனைவிதைகள் விதைத்த பள்ளி மாணவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசியப் பசுமை படைசார்பில் ஊரணிகளில் பனைவிதை விதைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். தேசியபசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் பனை மரத்தின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தேசியப் பசுமைபடையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஊரணிகளை சுற்றிசீமைக்கருவேல செடிகளை அகற்றினர்.

நீர்நிலையை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் ஊரணி பகுதியில் 250 பனைவிதைகளை விதைத்தனர். மேலும், சாத்தான்குளம் ஊர் சாலைகளில் இருபுறமும் பனை விதைகள் விதைத்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சுவாமிதாஸ், திருமூர்த்தி, சாம்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் கனிமுத்து, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஆசிரியர் கதிர்மணி நன்றி கூறினார். இயற்கைவளத்தை பாதுகாப்பதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இருக்கும் அக்கறையை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x