Published : 04 Dec 2019 11:20 AM
Last Updated : 04 Dec 2019 11:20 AM

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: 1,251 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 1,251 மாணவர்களுக்கு ஆளுநர் பட்டம் வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 40-வது பட்டமளிப்பு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன் வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் 1,180 பேருக்கு முனைவர் பட்டங்களும் பல்கலைக்கழக அளவில் சிறந்து விளங்கிய 71 மாணவர்களுக்கு பதக்கங்களும் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் நேரடியாக வழங் கினார். இதுதவிர தபால் மூலம் 1 லட்சத்து 14,696 பேருக்கு இளநிலை பட்டமும் 19,719 பேருக்கு முதுநிலை பட்ட மும் வழங்கப்பட்டன.

விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசி யதாவது: உயர்கல்வியில் தமிழ கம் முன்னோடி மாநிலமாக திகழ் கிறது. புதிய கல்லூரிகள், பாடப் பிரிவுகள் உள்ளிட்ட நடவடிக்கை கள் காரணமாக உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை வீதம் தமிழகத்தில் 49 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியைவிட அதிக மாகும். இதேபோல், அண்ணா பல் கலைக்கழகத்துக்கு தற்போது மத்திய அரசின் உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்தும் கிடைத்துள் ளது. இது நமக்கு பெருமையான விஷயமாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவுசார்ந்த சொத்தாக ஆளில்லா விமானம் உள்ளது. இதன்மூலம் வாகனங்கள் செல்ல முடியாத காடுகளில் விமானம் மூலம் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள வழிசெய்துள்ளது பாராட்டத்தக் கது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆராய்ச்சி போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் பங்கு பெற்று 2-ம் இடத்தையும் வென்றுள்ளது. தற்போது பட்டம் பெற்றுள்ள நீங்கள், விரும்பும் வேலை கிடைக் காமல் போனால் வருத்தப்பட வேண்டாம். உங்கள் தகுதிக்குரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். அதற்கு நம்பிக்கையுடன் காத்திருங் கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, அண்ணா பல் கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா வரவேற்புரை நிகழ்த்தி, ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். விழாவில் சீரான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ககன்தீப் காங், உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, அண்ணா பல் கலை. பதிவாளர் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x