Published : 02 Dec 2019 10:05 AM
Last Updated : 02 Dec 2019 10:05 AM

பழநி மாணவர்கள் சாதனை

இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு வளர்ச்சிக் கழகம் சார்பில் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் கோவாவில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து ஓட்டம், வட்டு எறிதல், கோகோ, கபடி எனப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க 600 பேர் கோவா சென்றனர். இதில் பழநியைச் சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்றனர்.

பத்து வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சுகைனா பானு, 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஓவியா, 100 மீட்டர் ஓட்டத்தில் ஊர்மிகா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் அபினந்த், 400 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விஸ்வராஜ் ஆகியோர் முதலிடம் பெற்று தங்கம் வென்றனர்.

இதேபோல் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் சஞ்சய், கீர்த்தனா, ஆன்ஸ்டீன் ரேகன், பிரதீப், யோகேஷ் என மொத்தம் 11 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். கோவாவில் இருந்து பழநி திரும்பிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x