Published : 28 Nov 2019 08:34 AM
Last Updated : 28 Nov 2019 08:34 AM

செய்திகள் சில வரிகளில்: இமாச்சல் பிரதேசத்தில் பனிப்பொழிவு - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இமாச்சல் பிரதேசத்தில் 32 செ.மீ. அளவுக்கு கடுமையான பனி பெய்து வருகிறது. இந்நிலையில், கின்னார் மாவட்டத்தில் பெய்து வரும் பனியால், மாவட்டம் முழுவதும் பனி படர்ந்து காணப்படுகிறது. அங்குள்ள ஒரு மலையில் கண்ணில் பட்ட இடமெல்லாம் வெள்ளை போர்வை போர்த்தியது போல் இருக்கும் காட்சி கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.படம்: பிடிஐ

சிம்லா

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அப்பகுதியில் சூரிய வெப்பம் மிகவும் குறைவாக இருப்பதால், வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு செல்லும். இந்த காலகட்டத்தில் பனிப்பொழிவு ஏற்படுகிறது.

இந்நிலையில், இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கின்னார் மாவட்டத்தில் 32 செ.மீ. அளவுக்கு பனி கடுமையான பொழிந்து வருகிறது. இதனால், சாலை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் 10 இன்சு உயரத்துக்கு மேல் பனி நிரம்பி வருகிறது.

இதனையடுத்து, கின்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தேதி குறிப்பிடப்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல், லாகால்-ஸ்பிட்டி மாவட்டங்களிலும் வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி அளவில் உள்ளது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் பரிவு, அமைதி தலைப்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

புதுடெல்லி

டெல்லியில் ‘வெர்வ் டீ எல் ஆர்ட்’ என்ற நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக டிசம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைதி, படைப்பாற்றல், பரிவு, பெருந்தன்மை ஆகிய தலைப்புகளில் பல்வேறு கலைப் படைப்புகள், சிலைகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன.

‘இன்னர் கனக்ட் ஆர்ட்’ (ஐகேஏ) என்ற அமைப்பினர் நடத்தும், இந்நிகழ்ச்சியை டெல்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் நடக்கவுள்ளது.

வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். கற்றுக்கொள், அதனுடன் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்” என்பதை மையமிட்டு கலைக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி டிசம்பர் 6-ம் தேதி வரை நடக்கிறது

.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x