Published : 27 Nov 2019 08:10 AM
Last Updated : 27 Nov 2019 08:10 AM

மனித உரிமைக்கான உயரிய விருதுக்கு 3 பெண்களின் பெயர்கள் பரிந்துரை

அம்னெஸ்டி, ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட சர்வதேச அளவில் பிரபலமான 11 தனியார் மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து மனித உரிமைக்கான உயரிய விருதான‘மார்ட்டின் என்னல்ஸ் விருது’ வழங்குகிறது. இந்த விருது, நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச அளவில் மனிதஉரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக பணியாற்றி வரும் 3 பெண் சமூக ஆர்வலர்கள், இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மார்ட்டின் என்னால்ஸ் விருதுக்கு 3 பெண்கள் இறுதிப் போட்டியாளர்களாக பரிந்துரைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஏமன் நாட்டின் வழக்கறிஞர் ஹுடா அல்-சாராரி(42). இவர் ஏமனில் 2015-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு அரசுகள் வைத்திருந்த ரகசிய சிறைச்சாலைகளையும், அதில் மக்கள் சித்திரவதை அனுபவித்ததையும் ஆதாரங்களுடன் உலகுக்கு வெளியிட்டார்.

அடுத்ததாக, நார்மா லெடெஸ்மா (53) என்ற மெக்சிகோ மனித உரிமை ஆர்வலர். மெக்சிகோவில் ஒரு நாளைக்கு 9-க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதாக ஐ.நா சபையின் பெண்கள் அமைப்பு கூறுகிறது.

நார்மா லெடெஸ்மாவின் மகள் பாலோமா,சில ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டுகொலைச் செய்யப்பட்டார். அதிலிருந்து, கடத்தலுக்கு உள்ளாக்கட்ட பெண்களின் நலனுக்காக ‘ஜஸ்டீசியா பாரா நியூஸ்ட்ராஸ் ஹிஜாஸின்’ என்ற அமைப்பின் மூலம் குரல் கொடுத்து வருகிறார். மூன்றாவதாக, பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிசானி நுகுபனே(73).

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை, சொத்து உரிமை ஆகிவற்றுக்கு குரல் கொடுக்க கிராமப்புற பெண்கள் இயக்கம் (ஆர்.டபிள்யூ.எம்) ஒன்றை தென்னாப்பிரிக்காவில் நடத்தி வருகிறார். இந்த 3 பெண் ஆர்வலர்களும், தங்கள் செயல்பாடுகளால் பல துன்பங்களை சந்தித்து வந்தாலும், தைரியமாக முன்னேறி செல்கிறார்கள் என்று விருது குழு கூறியுள்ளது.

இறுதி பட்டியலை ஜெனீவாவில் 2010 ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x