Published : 08 Nov 2019 02:46 PM
Last Updated : 08 Nov 2019 02:46 PM

பள்ளிகளில் காலநிலை மாற்றம் குறித்த பாடங்களைக் கட்டாயமாக்கிய இத்தாலி

ரோம்

பள்ளிகளில் காலநிலை மாற்றம் குறித்த பாடங்களை இத்தாலி அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுதொடர்பாக இத்தாலி கல்வித்துறை அமைச்சர் லோரன்சோ ஃபியராமண்டி கூறும்போது, ''நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் காலநிலை மாற்றம் குறித்த வகுப்புகள் கட்டாயமாக்கப்படும்.

காலநிலை மாற்றம் குறித்த வகுப்புகளைக் கட்டாயமாக்கிய முதல் நாடு இத்தாலிதான். பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து மாணவர்களுக்கும் இதுகுறித்த பாடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சுற்றியே அனைத்துப் பாடத் திட்டமும் அமையும் எனவும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சட்ட நிபுணரான அமைச்சர் லோரன்சோ, முன்னதாக பருவநிலை மாற்றம் குறித்த போராட்டங்களுக்காக, மாணவர்கள் வகுப்புகளை விட்டு, வீதியில் இறங்கிப் போராடலாம் என்று தெரிவித்திருந்தார்.

இமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவதால் சென்னை, கொல்கத்தா, சூரத், மும்பை போன்ற நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து மூழ்கக்கூடும் என்றும் மேலும் எதிர்காலத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறக் கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x