Published : 07 Nov 2019 08:01 AM
Last Updated : 07 Nov 2019 08:01 AM

வாரத்துக்கு 4 மணி நேரம் கூடுதல் உடற்பயிற்சி: குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க உதவும்

போஸ்டன்:

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மனநல அழுத்தத்தை எதிர்கொள்ள சிறந்த மருத்துவ உத்திகளுக்கு வழிவகுக்கும் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், வாரத்துக்கு 4 மணி நேரம் கூடுதலாக உடற்பயிற்சி செய்தால் மன அழுத்ததை 17% குறைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மனச்சோர்வு மற்றும் கவலை அதிகம் கொண்ட 8,000 நபர்களின் மரபணு மற்றும் மின்னணு சுகாதார பதிவு தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த செயல்கள் எவ்வாறு மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதைஅறிய நீண்ட கால ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களின் பழக்க வழக்கங்களை தொடர்ந்து 2 ஆண்டுகள் கண்காணித்து தகவல்கள் சேமிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள், தங்களின் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வழிக் கிடைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கர்மெல் சாய்கூறுகையில், “உடற்பயிற்சி மன அழுத்ததில் இருந்து விடுபட உதவுகிறது. அதேநேரத்தில் தற்போதைய ஆராய்ச்சியில் மன அழுத்தம், சோர்வில் உள்ள நபர்கள் வாரத்துக்கு 4 மணி நேரம் (ஒரு நாளைக்கு 35 நிமிடம் ) கூடுதல் உடற்பயிற்சி செய்தால், 17% மன அழுத்ததில் இருந்துவிடுபடலாம் என்று கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது.

அதேபோல், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மூலம் எதிர்கால தலைமுறையினரின் ஆபத்தை குறைக்க முடியும். அதாவது, தற்போது நீங்கள் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருந்தால், உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x