Published : 07 Nov 2019 07:58 AM
Last Updated : 07 Nov 2019 07:58 AM

ஹைதராபாத்தை கலக்கும் ஹலீம், பிரியாணி: உணவுப் பண்பாட்டின் நகரமாக அறிவிப்பு

ஹைதராபாத்

ஹைதராபாத் என்றாலே எச்சில் ஊறச் செய்யும் உணவு வகைகள் ஹலீமும் (‘ஹலீம்’ என்பது கோதுமை, பயறு மற்றும் கறியை கொண்டு சமைக்கப்படும் கஞ்சி போன்றதொரு உணவாகும்) பிரியாணியும் தான். இந்த உணவுகள் உலகின் வேறு பகுதிகளில் தோன்றியது என்றாலும் அதன் சுவையோடு கலந்துவிட்டனர். ஐதராபாத் நகரத்தை ‘உணவுப் பண்பாட்டின் படைப்பூக்க நகரம்’ என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இந்த உணவு பண்பாடு நேரடியாகவும் மறைமுகமாகவும் நகரத்தில் 12% மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் இது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாதி, மதம், இனம் கொண்ட மக்களை இணைப்பதற்கு வலுவான ஒத்திசைவாக உள்ளது என்றார் மேயர் பி.ராம்மோகன்.

“இந்த உணவுக் குறிப்புகள் வரலாற்றில் இருந்து உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. (குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா நாடுகளில் இருந்து பரவியது) அதேவேளையில் ‘ஹலீம்’ மற்றும் ‘பிரியாணி’ உணவுகள் உள்ளூர் சுவையுடன் கலந்து உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளன (புவிசார் குறியீடு பெற்றுள்ளது) என்றார்.

அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள், துருக்கியர்கள், ஈரானியர்கள், பெர்சியர்கள் ஆகியோர் உணவு உட்பட உள்ளூர் பண்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஹலீம் தற்போது உள்ளூர் சுவையுடன் இங்குள்ள உணவாகிவிட்டது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x